( வி.ரி.சகாதேவராஜா)

 இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் வேட்பாளரும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் கடந்த இரு தினங்களாக கிழக்கு மாகாணத்திற்கு சூறாவளிச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் .

அதன்போது திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கு
விஜயம் செய்திருந்தார்.

 அம்பாறை மாவட்டத்தில் முதல் கூட்டம் கல்முனை பிராந்திய தமிழரசுக் கட்சி பொதுச் சபை உறுப்பினர்களுக்கான கூட்டமாக பாண்டிருப்பு அண்ணா  மண்டபத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் 
பிரதான உரையாற்றினார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முதலில் உரையாற்றினார்.

பின்னர் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள பா.அரியநேத்திரன் ஜி.சிறிநேசன் சி. லோகேஸ்வரன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

 அங்கே தலைமை வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தான் தலைவர் தெரிவு போட்டியிடுவதன் நோக்கம் அதற்கான பின்புலங்கள் கட்சியின் செயற்பாடு தொடர்பாக உரையாடினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.

 பொதுச் சபை உறுப்பினர்களும் தங்களது சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொண்டார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.

 அதனை அடுத்த கூட்டம் அக்கரைப்பற்றிலே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில் அன்று மாலை நடைபெற்றது.

அங்கு ஊடகச் சந்திப்பும் இடம்பெற்றது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours