கோட்டாபய
ஆட்சிக்காலத்தில் கோரோனா ஜனாஸாக்களை கோட்டாவின் இனவாதம் காரணமாக
எரித்தமைக்காக மஹிந்தவோ நாமல் ராஜபக்ஷவோ இன்று வரை முஸ்லிம்
சமூகத்திடம் மன்னிப்புக்கேட்காமை கவலையளிக்கிறது என ஐக்கிய
காங்கிரஸ் கட்சியின் அவைத்தலைவர்
முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
பாராளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் பொதுஜன பெரமுன
காரியாலயத்தில் நடைபெற்ற கட்சிகளுடனான சந்திப்பின் போதே இவ்வாறு
அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2005 முதல் நாம் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வந்துள்ளோம். ஆனாலும் எமது கட்சிக்கு மஹிந்தவினால் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர்
2019ம் ஆண்டு பெசில் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இதே இடத்தில்
பேச்சுவார்த்தை செய்து பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்து
ஆதரவளித்தோம். பெரமுனவுக்கு முதன் முதலில் ஆதரவு கொடுத்த முதல்
முஸ்லிம் கட்சி எமது உலமா கட்சியாகும். அந்த ஒப்பந்தத்தின் பிரதி
கூட இன்று வரை எமக்கு தரப்படவில்லை.
ஆனாலும்
கோட்டாபயவை தேர்தலில் ஆதரித்தோர் என்ற வகையில் அவர் காலத்தில்
அநியாயமாக கொரோனா ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது அதை நிறுத்தும் படி
பல கடிதங்கள் அனுப்பினோம்.
ஆனாலும் கனக்கில் எடுக்கப்படவில்லை. இது விடயமாக பேச நேரம் தரும்படி கேட்டோம். அதுவும் நடக்கவில்லை.
இது சுகாதார பிரிவில் இருந்தோரின் இனவாதம் காரணமாகவே நடந்தது என்பதை இப்போது முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆகவே
இச்செயலுக்காக மஹிந்த ராஜபக்ஷ அல்லது நாமல் ராஜபக்ஷ முஸ்லிம்
சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இதனை
ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிச்சயம்
அதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என்று இந்த சந்தர்ப்பத்தில் பதில்
வழங்கினார்
Post A Comment:
0 comments so far,add yours