பொது மக்கள் மத்தியில் தொழு நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கரிப்பதும், இந் நோயினால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோரிடையே மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆறுதல் படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இறுதி ஞாயிற்றுக் கிழமையும் சர்வதேச ரீதியில் தொழு நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
உலகில் ஆண்டு தோறும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் வருமொன்றுக்கு 2000 பேர் பாதிப்பிற்குள்ளாகி வருவதாக தொற்று நோய் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர், விஷேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், சமூகத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.தொழு நோய் "மைக்கிரோ பக்ரீரியம் லெப்ரோ " எனும் பக்ரீரியாவினால் ஏற்படுத்தப்படும் ஒரு தொற்று நோயாகும்.
சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவரை கண்கள் மற்றும் கைகள் பாதிப்புள்ளாக கூடும்.மூக்கு மற்றும் வாய் மூலம் இந்ந நோய் பரவக்கூடியது.
எனவே, நோய் அறியப்பட்ட உடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.
சிறப்பு உடைகளை அணிவதுடன் பொது மக்கள் அதிகம் சஞ்சரிக்கும் இடங்களுக்கு செல்வதனை கூடியவரையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
வரலாற்றில் மிகப் பழங்காலந்தொட்டு இந் நோய் அறியப்பட்டிருந்தாலும் இன்றைய நோய் பல தன்மைகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றது.
என்று டொக்டர் சனூஸ் காரியப்பர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours