....
(பா.உ. எம்.ஏ.சுமந்திரன்)
தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தியிருக்கின்றது. புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நண்பன் சிறிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், இந்த பயணத்திலே நாங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வியுற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது. இதிலே வெற்றி பெற்ற சக வேட்பாளர் எனது நண்பன் சிறிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எங்களது முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் இத்தனை காலமும் வழிநடத்திய தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு தற்போது நண்பன் சிறிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் சந்தோசமான விடயம். இந்த பயணத்திலே நாங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம். இது நாங்கள் இருவரும் தேர்தல் காலத்திலேயே மக்களுக்குத் தெளிவாக சொல்லி வந்த விடயம் அப்படியாகவே தொடர்ந்து பயணிப்போம்.
எனது முழுமையான ஆதரவை தற்போது ஜனநாயக முறையிலே தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற தலைவருக்கு முழுமையாக வழங்குவேன் என்பதையும் இந்த வேளையிலே அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Post A Comment:
0 comments so far,add yours