(அஸ்ஹர் இப்றாஹிம்)

சிவபூமியாம்  திருமூலரால் போற்றப்பட்டு வரும் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பழமையும்  வரலாறும் கொண்ட  கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பண்டைய வரலாற்றுத் தொன்மைமிக்க தாண்டியடி, சங்கமன்கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலய புனர் நிர்மான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது பஞ்பூதங்களின் ஆசீர் வாதத்துடன்னும் பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் சோபகிருது வருடம் 2024/01/24  காலை 9.40 முதல் 10.50 வரையான சுப வேளையில் இடம்பெற்றது.

  இந் நிகழ்வுகள் யாவும்  ஆலய நிர்வாக சபை  தலைவர் திரு.த.முருகானந்தராசா அவர்களின் தலைமையில் நிகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வில் ஆலயத்தலைவரினால் பிரதான அடிகல் எடுத்துச் செல்லப்பட்டு சாம ஸ்ரீ தேசமான்ய சிவாச்சாரியார் திலகம் அகோர சிவாச்சாரியார் சிவப்பிரம்ம  ஸ்ரீ சி.கு.கணேஸ்சமூர்த்திஸ்வர குருக்கள் அவர்களினால் ஆலயம் அமைப்பதற்கான குறித்த வளாகத்தில்  நடப்பட்டது...

மேலும் இவ் நிகழ்வின் ஆசி உரையினை சாம ஸ்ரீ தேசகீர்த்தி ஈசான  சிவாச்சாரியார் சிவப்பிரம்ம  ஸ்ரீ .கணேசதிவிசாந்த குருக்கள் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்...

மேலும் இவ் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக கலாச்சார  உத்தியோத்தர் திரு.நிஷாந்தினி அம்மனி அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் ,திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர்  , ஆலய  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்...

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours