(எம்.எம்.றம்ஸீன் )
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளாரினால் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் உதவி அதிபராக நியமனம் செய்யப்பட்ட இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 ஐச் சேர்ந்த ஜனாப். எம்.ஏ.எம். சிராஜ் அவர்கள் கடமையேற்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கடமையேற்பு நிகழ்வில் சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலய அதிபர் எம். அப்துல் ரஹீம் , அல்-ஜலால் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் டீ.கே.எம். சிராஜ் , பாடசாலை முகாமைத்துவக் குழுவினர், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் எம். ஐ. எம். றியாஸ் , சம்மாந்துறை அல்-அர்சத் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் குழாத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆங்கிலப்பாட ஆசிரியராக கடமையாற்றிய எம்.ஏ.எம். சிராஜ் 2019 ஆம் ஆண்டு அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு சம்மாந்துறை அல்-அர்சாத் பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றி இடமாற்றத்தின் ஊடாக சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours