(எம்.எம்.றம்ஸீன் )
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு மேற்பார்வை மற்றும் சிரமதான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம்.பஸால் அவர்களின் நேரடி கண்காணிப்புடன் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். தஸ்லிமா வசீர் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் ஒரு வார காலத்திற்கு டெங்கு மேற்பார்வை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours