எஸ்.சபேசன்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் பத்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் பொங்கல் விழா- 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் தலைமையில் சுவிஸ் உதயம் அமைப்பின் அங்கத்தவர்களின் ஒழுங்கமைப்பிலும் சுவிஸ் நாட்டின்Treffpunkt wittig kofen jupiters trasse 15 ,3015 B இல் நடைபெறவுள்ளது
தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவ்விழாவிற்கு சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் அலோசியஜின் மின்னல் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெறவுள்ளது அத்தோடு சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும் படைக்கப்பட இருக்கின்றது இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு செயலாளர் அம்பலவாணர் ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்எஸ்.
Post A Comment:
0 comments so far,add yours