(வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றபோது 76 வயதைப் பூர்த்தி செய்த ஓய்வூதியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

 காரைதீவு  பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலகத்தில் சிவில் ஓய்வூதியம் பெறும் இவ் வருடம்  76  வயதை பூர்த்திசெய்த ஓய்வூதியர்கள்  பொன்னாடை போர்த்தி  நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு காரைதீவு பிரதேச செயலகத்தில் நீண்டகாலம்  ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் சிலரும் அவரது வீடுகளுக்கு சென்று பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இது தவிர அரசின் "சுவதரணி" வேலை இத்திட்டத்தின் கீழ் மூலிகை கன்றுகள் பல ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தில் நடப்பட்டதுடன் பல பயனதரும் மரங்கள் பிரதேசத்தில் நடப்பட்டன.

சுதந்திரதினத்தையொட்டி கடற்கரை சுத்தப்படுத்தல் சிரமதானமொன்று கடந்த வெள்ளியன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours