அம்பாறை மாவட்டத்தில் பரவலாக பெரும் போக வேளாண்மை அறுவடை முடிந்த நிலையில் வயல் வெளிகளை நோக்கி கூட்டமாக பெரும் தொகையில் காட்டு யானைகள் வர ஆரம்பித்துள்ளன.
சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியிலுள்ள வயல் பிரதேசங்களில் புதன் கிழமை காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்டது.
இந்த யானைக்கூட்டம் ஊருக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்த்தில் கூக்குரல் இட்டு அந்த யானைகளை காட்டுப் பக்கம் துரத்தி அனுப்புவதில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours