இ.சுதாகரன்
மண்முனை தென் கழக எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் 2024 ம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் கழக புனரமைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.
ம.தெ.எ.பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகப் புணரமைப்பு பொதுக் கூட்டமானது 2024-2-23 ஆம் திகதி அதாவது இன்றையதினம் மு.ப.9.00 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ம.தெ.எ.பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு.த.சபியதாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில் சம்மேளன தலைவர் செல்வன்.தி.ஜெகநாதன் அவர்களின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.நா.குகேந்திரா
மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி. நிஷாந்தி அருள்மொழி,
மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் செல்வன்.யுவப்பிரகாஷ், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வன்.கு.துஷாந்தன் மற்றும் இளைஞர்கள்,யுவதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்தும் புதிய நிர்வாகத் தெரிவில்
தலைவராக செல்வன்.ஞா. சஞ்ஜீவன்
பொருளாளராக செல்வி.கு. சுவர்ணியா
அமைப்பாளராக செல்வன்.கு. இன்பலோஜன்
உப தலைவராக செல்வன் தி. ஜெகநாதன்
உப செயலாளராக செல்வி.க. பவித்திரா
உப அமைப்பாளராக சி. ஹம்சேஸ்திரன்
செயற்பாட்டு குழு செயலாளர்களாக
விளையாட்டு - செல்வன். யோ. நிலக்ஷன்
கலாச்சாரம் - செல்வன்.உ. கேனுஜன்
முயற்ச்சியாண்மை - செல்வன்.த. லக்ஷ்சான்
ஊடகம் மற்றும் தகவல் - செல்வன்.ஜெ. யேனுஷன்
தேசிய சேவை - செல்வன்.அ. தனுஜன்
கல்வி பயிற்சி தொழில் ஆலோசனை மற்றும் வழிநடத்தல் - வி. டனுஜியா
நிதி- பி. டனுஸ்காந்
சூழல் பாதுகாப்பு - பு. வர்ணிதன்
கணக்காளர் - த.கம்ஜன்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.அத்தோடு இக் கூட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு - கேகாலை இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்,யுவதிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours