(அஸ்ஹர் இப்றாஹிம்)

 “ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கமைய புனரமைக்கப்பட்ட
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) நூலகமானது  "அறிவுத்தேடலுக்கு முதலிடம்" எனும் தொனிப்பொருளில் கல்லூரியின் 
நூலக பொறுப்பாளர் ஏ.எல். நளீம்  தலைமையில் மிக சிறப்பான நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) 
எம்.எச்.எம். ஜாபீர், கெளரவ அதிதியாக அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட நூலக புனரமைப்பு, நூலக நிருவாக கட்டமைப்பு, அழகு, அபிவிருத்தி, மேலதிக தேடல், நவீன தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்னுட்ப சாவல்களை மாணவிகள் முகம்கொடுக்கும் வகையில் கணினி மயப்படுத்தப்பட்ட நூலகம் போன்ற இதர தேவைகளை நூலக பொறுப்பாளர் அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது அதற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்கி நூலக கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டமை இக்கல்லூரியின் வரலாற்றின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகின்றது.

நூலக வள நிலையத்தில் மிகவும் பெறுமதியான சமயம், அகராதிகள், நாவல், கல்வி, அறிஞர்கள், பாடப் புத்தகத்துடன் தொடர்பான நூல்கள், செய்தி பத்திரிகைகள், கவிதைகள், சஞ்சிகைகள் என பல் துறைசார்ந்த நூல்கள், பழைய முத்திரைகள், நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை கல்வி வலயத்தின் கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கடந்த வருடம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கல்லூரி நூலகத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரை, சித்திர போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர்களான எம்.எஸ் மனூனா,
என்.டி நதீகா, நூலக உத்தியோகத்தர்கள், நூலக சங்கத்தின் மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours