( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில்
பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கபட்ட
மக்களுக்காக 2023ம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு ரூபா 6
இலட்சம் மற்றும் 10 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கபட்டன.
அதன்
முதல் கட்டமாக மூன்று வீடுகள் கடந்த புதன்கிழமை பிரதேச
செயலாளர்.த.கஜேந்திரன் தலைமையில் அவரின் அழைப்பின் பெயரில் நேற்றைய
முன்தினம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான டி. வீரசிங்க ஆகியோர்
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு மூன்று
வீடுகளையும் பயனாளிகளுக்கு கையளித்தார்.



Post A Comment:
0 comments so far,add yours