(அஸ்ஹர் இப்றாஹிம்)
பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக முறைசாராக் கல்விப்பிரின் ஒழுங்கு படுத்தலில் களுதாவளை சமுக பொருளாதார அபிவித்திச்சங்கம் (Seeda) கட்டாரில் தொழில் புரியும் உற வுகளின் பிரதான அனுசரணையில் வருடாவருடம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களை அந்நிலையிலிருந்து மீட்டு இடைவிலகலைத் தவிர்த்து தொடர் கல்வியை பெறுவதற்காக கற்றல் உபகரணங்களை வழங்குகின்ற நிகழ்வின் முதல் கட்டம் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தே.பா) களுவாஞ்சிகுடியில் முறைசாராக்கல்வி இணைப்பாளர் திருமதி.றீற்றா கலைச்செல்வனின் ஏற்பாட்டில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு .சிவானந்தம் சிறீதரன் அவர்களின் தலைமையில் கடந்த வியாளன் (15) நடைபெற்றது .
இதில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப்பணிப்பாளர் மாணவர் அபிவிருத்தி திரு. இ.ஜுவானந்தராசா, சீடா அமைப்பின் தலைவர் திரு. க.கிசோபன், சீடா அமைப்பின் உறுப்பினர்கள், பட்டிருப்பு கல்வி வலயத்தின் மண்முனை தென் எருவில்பற்று கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள்,முறைசாராக்கல்வி உத்தியோகத்தர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,வளவாளர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர் கள் கலந்து கொண்டனர் .
Post A Comment:
0 comments so far,add yours