வங்கி வட்டிவீதங்கள் குறைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல்துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்த வட்டி வீதங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டன.

கடன்களுக்கான வட்டி வீதம் 16.5 வீதமாகவும், வைப்புகளுக்கான வட்டிவீதம் 15.5 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.ஆனால் கடந்த 2023ஆம் ஆண்டு தொடக்கம் வட்டி வீதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டன. பணவீக்கம் தொடர்ந்து குறைவடைந்து வருவதால் மத்திய வங்கி இவ்வாறு வட்டிவீதங்களை குறைத்தது.

எனினும் மத்திய வங்கி நிர்ணயிக்கின்ற வட்டி வீதத்துக்கு வங்கிகள் பேணுகின்ற வட்டி வீதங்களுக்குமிடையில் பாரிய வித்தியாசமும் இடைவெளியும் காணப்பட்டன.

ஆனால் தற்போது அந்த இடைவெளி குறைவடைந்து வருகின்றது. அதாவது மத்திய வங்கி நிர்ணயித்திருக்கின்ற வட்டி வீதங்களுக்கு அருகில் சந்தையில் வங்கிகள் வழங்கும் வட்டி வீதமும் நெருங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

வருடம் ஒன்றுக்கு எட்டு தடவைகள் மத்திய வங்கியின் நாணய சபை கூடி வட்டி வீதங்கள் தொடர்பான ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பது வழமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours