பாறுக் ஷிஹான்



 பிச்சை எடுத்தாவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது .எனினும் வடக்குக் கிழக்கெங்கும் கரி  நாளாக அனுஷ்டிப்போம் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று(3) அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

 பிச்சை எடுத்தாவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.எனினும் தமிழ் தேசத்தை பொறுத்தவரை இது ஒரு கரிநாள்.எமக்கு சுதந்திரமோ அல்லது விடுதலை மற்றும் உரிமைகள் கிடைக்கப்பெறாமையை உறுதிப்படுத்துவதற்காக வடகிழக்கில் தமிழ் மக்களும் பொது அமைப்புகளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் தமிழ் தேசிய முன்னணியினராகிய நாங்களும் அணி திரண்டு எதிர்ப்பினை பதிவு செய்ய இருக்கின்றோம்.எனவே சுதந்திர தின நாளை பகிஸ்கரித்து தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்வதற்கு அந்நாளை பயன்படுத்துவோம் என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours