( வி.ரி. சகாதேவராஜா)


மார்ச் 12 இயக்கம் தூய்மையான அரசியலுக்காக செயல்படுகிறது.
நாம் எமது வாக்குகளை அறிவு பூர்வமாக பயன்படுத்த வேண்டும். தகுதியானவர்களை மாத்திரமே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டும். இதுவே எமது தலையான கடமையாகும்.

இவ்வாறு மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் அறைகூவல் விடுத்தார்.

மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்ட ஊடகச் சந்திப்பு இன்று(11) திங்கட்கிழமை  சேனைக் குடியிருப்பு சேவோ தலைமையகத்தில்  நடைபெற்றது .

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

  அக்டோபர் 16 ஆம் தேதி சகல தேர்தல் அதிகாரங்களும் தேர்தல் ஆணையகத்திடம் செல்கின்றன.அதன் பின்பு பாராளுமன்றமோ அல்லது ஜனாதிபதியோ தேர்தலில் தலையிடும் அதிகாரம் இருக்காது.எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் வைத்தே ஆக வேண்டும். எனவே மக்கள் விழிப்படைய வேண்டும்.

நிதியின்மை போன்ற காரணங்களை காட்டி உள்ளூராட்சி  தேர்தல் பின்போடப்பட்டது. இருந்தபோதிலும் எதிர்வரும் அக்டோபரில் தேர்தல் நடத்தியாக வேண்டும் . 

மார்ச் 12 இயக்கத்தின் குறிக்கோளின் படி எட்டு தகுதிகள் ஒரு பாராளுமன்ற  உறுப்பினர் வேட்பாளருக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 அந்த எட்டு தகுதிகளும் இருக்கின்றவர்களுக்கு தான் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிஅளிக்க வேண்டும். கட்சிகளும் அனுமதி அளிக்க வேண்டும்.
தரமான பிரதிநிதியை தெரிவு செய்கின்ற உரிமை மக்களுக்கு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் எடுக்கின்ற முடிவு அடிப்படையில் நாட்டின் கிராமத்தின் மற்றும் உங்களது நகரத்தின் எதிர்காலமும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலமும் தங்கி உள்ளது .

ஆகவே பெறுமதியான உங்களது வாக்கினை அளிப்பதற்கு முன்னர் உங்கள் பிரதிநிதியை சரியாக கண்டு கொள்ளுங்கள்.
 மார்ச் 13ஆம் தேதி விசேட வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
 தொடர்ச்சியாக மார்ச் 28-ஆம் தேதி கொழும்பு விகாரமாதேவிதேவி பூங்காவில் இலங்கையில் இருந்து வருகின்ற அனைத்து பிரதிநிதிகளும் ஒன்று கூடி பாரிய புதிய அரசியல் தூய அரசியல் நடத்துவதற்கு முன்ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .

தகுதியாக பாராளுமன்ற உறுப்பினர்களை தகுதியானவர்களை பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்து நாட்டையும் வீட்டையும் பலப்படுத்துவோம். என்றார்.

ஊடகச் சந்திப்பில் மாவட்ட உறுப்பினர்களான வி.ரி.சகாதேவராஜா, கே.சந்திரலிங்கம் ,எஸ்.தஸ்தகிர், எஸ்.நாகேந்திரன், ஏ.எல்.சுபைர், திருமதி நடராசா நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours