( வி.ரி.சகாதேவராஜா)

அகில உலக ராமகிருஷ்ண மிஷனின் பெருந்தலைவர் அதி வணக்கத்திற்குரிய சங்ககுரு ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மகராஜ்  நேற்று (27) புதன்கிழமை இரவு 9 மணியளவில்  வேலூர் மடத்தில் அக்கினியுடன் சங்கமமானார்.

அகில உலக ராமகிருஷ்ண மிஷினின் 17 வது தலைவராக வரவிருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த ஜீ மகராஜ் உள்ளிட்ட பெரும் துறவிகளின் முன்னிலையில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் அவரது  இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.

கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில், அதி வணக்கத்திற்குரிய சங்ககுரு ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மகராஜ் நேற்று முன்தினம் (26) செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 94.

 மகாராஜின் உடல் பேலூர் மடத்தில் (கலாச்சார மண்டபம்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனால் நேற்று முன்தினம் இலங்கை வந்த அகில உலக ராமகிருஷ்ண மிஷன் துணைப் பொதுச் செயலாளர் ஶ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ் அவர்கள் அவசரமாக நேற்று நாடுதிரும்பினார். 

அவர் கலந்து கொள்ளவிருந்த  முப்பெருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours