நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இப்தார் நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.பீ. அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் அனைத்து உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அம்பாறை பொது வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவு வைத்திய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஸம்சுதீன் (ஹாமி) அவர்களினால் மார்க்க உபன்னியாசம் நிகழ்த்தப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours