நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள 5ஆம் கிராமம் மெகா பாலர் பாடசாலை நிரந்த கட்டிடமின்றி இயங்கிய நிலையில், நளீர் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான எம்.ஏ.நளீர் , அவுஸ்டேலியாவிலுள்ள நண்பன் ஒருவரின் 07இலட்சம் ரூபாய் நிதி உதவியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட பாலர் பாடசாலையினை  திறந்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மெகா பாலர் பாடசாலையின் அதிபர் ஏ.எஸ்.பிர்தௌஸியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு  நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் பீ.பிரணவரூபன்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

கெளரவ அதிதியாக நளீர் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான எம்.ஏ.நளீர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ரஜீவ்காந்த், கிராம அபிவிருத்தி உத்தியேகத்தர் எஸ்.சர்மிலராஜ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிப்கான், ஸபூரியா ஜும் ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.பீ. சுபைதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.றியாஸ், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்பாலர் பாடசாலைக்கு நிரந்தர கட்டிடம் நீண்டகாலமாக கட்டி முடிக்கப்படாமல் பற்றைக் காடாக கட்சியளித்த கட்டிடத்தை நளீர் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான எம்.ஏ.நளீரிடம் பாடசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கமைய கட்டி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours