(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

ஏறாவூர்ப்பற்று - செங்கலடி பிரதேச செயலக கிராம அபிவிருத்திப் பிரிவினால்  (28) திகதி மயிலம்பாவெளி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 16 உறுப்பினர்களுக்கு சுயதொழில் ஊடான வாழ்வாதார மேம்பாட்டிற்காக கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சங்க நிதியினூடாக ரூபாய் 800,000/- (எட்டு இலட்சம்) சுழலும் கடன் திட்டத்தின் கீழ் இக்கடனுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இக் கொடுப்பனவானது பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் அனுமதி மற்றும் ஆலோசனையின் கீழ் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அகிலேஸ்வரனின் மேற்பார்வையின் கீழ் கிராம அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஸப்ரி ஹசதினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிருவாக சபை உறுப்பினர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours