சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தமது எரிபொருள்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 09 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.
அத்துடன் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.
இதேவேளை, ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலின் விலையில் சினோபெக் நிறுவனம் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை.
எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours