எருவில் மண்ணில் சித்த வைத்திய துறையில் நீண்டகாலமாக சேவைபுரிந்து வருகின்றமைக்காக திருமதி மகேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் "மாண்புறு மங்கை " என்ற விருது வழங்கி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரால் கெளரவிக்கப்பட்டார்.
(20/03/2023) "அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" என்ற தொனிப் பொருளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் களுதாவளை ஆலயங்களின் நிருவாக சபைகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுடன் இணைந்து நடாத்திய சர்வதேச மகளீர் தினம் 2024 ற்கான நிகழ்வு களுதாவளை பிள்ளையார் ஆலய முன் வீதியில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதிசிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி யஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ம. தெ. எ. பற்று பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள். ஆலயங்களின் அறங்காவலர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது எருவில் மண்ணில் சித்த வைத்திய துறையில் நீண்டகாலமாக சேவைபுரிந்து வருகின்றமைக்காக திருமதி மகேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் "மாண்புறு மங்கை " என்ற விருது வழங்கி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரால் கெளரவிக்கப்பட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours