மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் மாங்காடு பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வீவீதயோரத்தில் இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனத்தில் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து சம்பத்தில் பஸ்ஸில் பயணித்தவர்களில் 5 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளை உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours