தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டா டு கின்றனர்.
சோபகிருது வருடம் போய் இன்று குரோதி வருடம் பிறக்கிறது. இது 60 வருட சுழற்சியில் 38 வது வருடமாகும்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைக்கிறோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்புலத்தில் மிகப்பெரிய அறிவியலை வைத்திருக்கின்றார்கள் தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் கொடுக்கிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் சிறிது சிறிதாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அதன் பின்னர் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி
சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு
மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!! 364 நாட்கள்.
சரி... இதற்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
பின்னர் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த
வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு
உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான்
திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.
இது
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும்
அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்பது எமது கடமை.
விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா
Post A Comment:
0 comments so far,add yours