காரைதீவைச் சேர்ந்த திருமதி ஜெயகோபன் நந்தினி தனது 60 வது வயதில் இன்று ஓய்வு பெற்றார்.
அவர் இறுதியாக கற்பித்த நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மஹா வித்தியாலயத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை பிரியாவிடை நிகழ்வு நடாத்தப்பட்டது.
2000ம் ஆண்டு தொடங்கிய அவரது ஆசிரியர் சேவை 2024 உடன் நிறைவு பெற்றது.
2000 - 2008 வரை விபுலானந்த மத்திய கல்லூரி காரைதீவு
2009- 2019 வரை அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயம் . இறுதியாக
2020- 2024 வரை: இமாம் கஸ்ஸாலி மஹா வித்தியாலயத்தில் இன்று வரை சேவையாற்றினார்.
நிகழ்வில் அவரது குடும்பம் கலந்துகொண்டது.
தன்னுடைய
இந் நிகழ்வை மேலும் சிறப்பித்து பிரியாவிடை நிகழ்வை அளித்த சகோதர பாடசாலை
இமாம் கஸ்ஸாலி மஹா வித்தியாலய அதிபர் ஆசிரிய மற்றும் ஊழியர்கள்
அனைவருக்கும் என் நன்றிகள் என்று அவர் நன்றிகள் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours