( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள்
ஆலயத்தின் இரண்டாவது வருடாந்த அலங்கார உற்சவத்தின் பாற்குட பவனி இன்று
(19) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்துக்கு மேற்கு புறமாக உள்ள சிவன் ஆலயத்தில் விசேட கிரியைகள் பூஜை இடம் பெற்று பாற்குடபவனி ஆரம்பமானது.
முன்னே
ஆலய பரிபாலன சபை தலைவர் கி. ஜெயசிறில் பிரதான கும்பம் தாங்க, ஆலோசகர்
வி.ரி.சகாதேவராஜா பிரதான மடை தாங்க ,ஆலய குரு சிவஸ்ரீ ச. கோவர்த்தனசர்மா
வழிகாட்டலில் பாற்குடபவனி சிறப்பாக நடைபெற்றது.
இதேவேளை
உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய
குரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் நடைபெற்று
வருகின்றன.
இவ்வாறு
தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல் அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம்
பெற்று எதிர்வரும் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று
தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .
இந்த
பத்து நாள் அலங்கார உற்சவ திருவிழாக்காலங்களில் காலை 10 மணிக்கு கும்ப
பூஜையுடன் ஆரம்பமாகி பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவ பிரதான பூஜை,
அம்பாளின் வீதியுலா இடம் பெறும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தினமும்
அன்னதானம் வழங்கப்படுகிறது .
Post A Comment:
0 comments so far,add yours