பாறுக் ஷிஹான்

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல.ஆனால் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பது தவறானது என மதத்தலைவர்கள் குறிப்பிட்டனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டமானது 12 ஆவது நாளினை அடைந்துள்ளது.

இன்று(5) குறித்த போராட்டத்திற்கு மதியம் கல்முனை பகுதியில் சமயத் தலைவர்கள் சமூக சேவகர்கள்  வருகை தந்து   ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்துக்களை முன்வைத்தனர்.

01. சிவஶ்ரீ ந.பத்மநிலோஜன் குருக்கள்
02. போதகர் ஏ.கிருபைராஜா
03. சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன்

உட்பட அ.டிலான்சன் திருமதி.எஸ்.நித்தியகைலேஸ்வரி திருமதி.ச.கல்யாணி திருமதி.த.செல்வமணி பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours