(எஸ்.அஷ்ரப்கான்)
சம்மாந்துறை
சமூர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் ஹுதா வங்கிப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட
சௌபாக்கியா வீடுகள் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர்
எஸ்.எல். முஹம்மது ஹனிபா தலைமையில் இன்று (02) இடம்பெற்றது.
இந்
நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.ஏ.சி.அஹமது ஷாபீர்
பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீடுகளை திறந்து கையளித்தார்.
இந்
நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,
சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம் சலீம்,மாவட்ட சமூக
அபிவிருத்தி முகாமையாளர்,அபிவிருத்தி உதவியாளர்,வங்கிச் சங்க
முகாமையாளர்,திட்ட முகாமையாளர்,வலய முகாமையாளர்,சமூக அபிவிருத்தி
உதவியாளர்,வலய உதவி முகாமையாளர்,சமூர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள்,பிரதேச மட்டத் தலைவர்,வங்கி கட்டுப் பாட்டுச் சபைத்
தலைவர் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours