எஸ்.சபேசன்
பொத்துவில் ஊறணி சரஸ்வதி வித்தியாலய மைதானக் காணி விடயத்திற்கு கலையரசனால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அபிவிருத்திக் குழுவில் நிறைவேற்றம்…
(உரிய அதிகாரிகள் ஊடாக விரைவில் நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானம்)
பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் எஸ்.எம்.எம் முஸரப் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் பொத்துவில் பிரதேச பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகள், வீதி அபிவிருத்திச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தன.
அந்தவகையில் பொத்துவில் ஊறனி பிரதேச சரஸ்வதி வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவைப்பாடாக இருந்து வந்த மைதானக் காணி தொடர்பான விடயத்திற்கு இன்றைய தினம் ஒரு தீர்க்கமான முடிவு எட்டுப்பட்டு அதனை உரிய அதிகாரிகளினூடாகப் பெற்றுக் கொடுப்பதற்கு அனுமதி எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சங்கமன்கண்டி கிராமத்தின் செல்வமணி வீதியினை தற்காலிகமாக கிரவல் வீதியாகப் புனரமைப்பதற்கான அனுமதியும் வழங்கப்ட்டிருந்தது. மேலும் பிரதேசசபைச் செயலாளர் ஊடாக செல்வமணி வீதி, முத்துமாரியம்மன் வீதி, மணச்சேனை வீதி என்பவற்றிற்கு மின்விளக்கு இடுவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதேச சபைச் செயலாளர் இதன்போது தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours