மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் விநாயகர் மகா
வித்தியாலயத்திற்கு டென்மார்க் நாட்டின் டொற்றி கழகக் பிரதிநிதிகளின் நிதி
உதவியுடன் கற்றல் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி
மதிவதனி பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
குறித்த
பாடசாலையானது 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக அழிவடைந்ததன்
காரணத்தினால் புதிதாக பிறிதொரு இடத்தில் அமைக்கின்ற பணியினை டென்மார்க்
நாட்டின் ரோட்டரி கழகப் பிரதிநிதிகள் முன்னெடுத்திருந்தனர் அதற்கமைய
குறித்த பாடசாலை யானது பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு
கையளிக்கப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலையில் காணப்படும்
குறைபாடுகளை இனங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்து வருவது வழமையாகும்
இதற்கமைவாக வேண்டுகோளுக்கு அமைய 2023 ஆம் ஆண்டுக்கான செயற்பாடாக குறித்த
தளபாடங்கள் கையளிக்கப்பட்டன.
இந்த
நிகழ்வில் டென்மார்க் நாட்டின் ரோட்டரி கழகத்தின் மாவட்ட முன்னாள் ஆளுநர்
கேஜ்.அண்டக்ஷன், போல்.அண்ட்சக்ஷன் அவர்களுடன் மட்டக்களப்பு நகர் ரோட்டரி
கழக தலைவர் எம்.செல்வராசா,செயலாளர் டாக்டர் கே. கருணாகரன்,
பொருளாளர்,சரவணபவன், மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர் ரொட்டேரியன்
கே.கருணாகரன், ரொட்டேரியன்.பேராசிரியர் பிரதிபன், வருடத்துக்கான தலைவர்
ரொட்டேரியன். ஜெயவண்ணன், மது வரி திணைக்கள அத்தியட்சகர் ரொட்டேரியன்.ரஞ்சன்
பாடசாலை அபிருத்தி சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என
பலரும் கலந்து கொண்டனர்.
இதன்
போது 100 மாணவர் மேசை கதிரைகள், 20 ஆசிரியர் மேசை கதிரைகள், 50 றபர்
கதிரைகள், 10 அலுமாரிகள் அடங்கலாக சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான
தளபாடங்கள் இதன் போது கையளிக்கப்பட்டது.
மேற்படி
தளபாடங்கள் அனைத்தும் மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழக பிரதிநிதிகள் அடங்கிய
குழுவினரின் மேற்பார்வையின் கீழ் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு
மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.கலந்து கொண்ட ரோட்டரி கழக பிரதிநிதிகள்
பாடசாலைக்கு மேலும் அவசரமாக தேவையாகவுள்ள குறைபாடுகளை பாடசாலை அதிபரிடம்
விரிவாக
கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த தளபாடங்களின் பாவனை தொடர்பாகவும் நேரடியாக மாணவர்களின் வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டனர்.
கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த தளபாடங்களின் பாவனை தொடர்பாகவும் நேரடியாக மாணவர்களின் வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours