துறைநீலாவணையில்   சுமார் 500 மீற்றர் நீளமான காபட் இடப்பட்ட கண்ணகி அம்மன் ஆலய பிரதான வீதி இன்றைய தினம் அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் வர்த்தக வாணிப உணவுப்பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர்  கௌரவ சதாசிவம் வியாளேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்  பொறியியலாளர் வரதன் ,அமைச்சரின்பிரத்தியேகச் செயலாளர் உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகள் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டதுடன்  பழைய மாணவர் சமூகம் என்ற ரீதியில் பாடசாலை அபிவிருத்தி சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours