பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை நிகழ்வு இன்று (26) காலை முதல் மாலை வரை மாளிகைக்காடு தனியார் விருந்தினர் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
தூய்மையான அரசியலுக்காகச் செயற்படும் மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இம் மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஸ உட்பட உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் கிராம ரீதியாக அழைக்கப்பட்ட மூவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடலில் பங்கேற்று தத்தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
நாம் எமது வாக்குகளை அறிவு பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். தகுதியானவர்களை மாத்திரமே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்ப வேண்டும். இதுவே எமது தலையான கடமையாகும் என்று மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டக் கிளை அறிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours