உலகின்
முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின்
துறவற நூற்றாண்டு விழாவையொட்டி இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம்
நடாத்தும் மூன்று நாள் இசைத்தமிழ் விழா நாளை(31) வெள்ளிக்கிழமை கொழும்பு
தமிழ்ச் சங்கத்தில் ஆரம்பமாகின்றது.
துறவற நூற்றாண்டை யொட்டி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சுவாமிகளின் திருவுருவச் சிலை நிறுவப்படவுள்ளது.
இந்து
சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் யூ.அனிருத்தனின் ஏற்பாட்டில்
கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நாளை
வெள்ளிக்கிழமை(31) முதல் சனி(1) ஞாயிறு(2) தினங்களில் நடைபெறும்.
நாளை(31) பிற்பகல் சுவாமி விபுலானந்தரின் திருவருவச்சிலையுடன்
சைவ மங்கையர்வித்தியாலயத்திலிருந்து கொழும்பு தமிழ்ச் சங்கம் வரை ஊர்வலம் இடம்பெறும்.
பின்பு 4 மணியளவில் அங்கு சுவாமி விபுலானந்தரின் சிலை ஆறுமுகநாவலரின் சிலைக்கு இடப் புறமாக திறந்து வைக்கப்பட இருக்கிறது.
கொழும்பு
தமிழ்ச்சங்க வரலாற்றில் முதல் தடவையாக நிறுவப்படும் இத் திருவுருவச்
சிலையை, தற்போதைய தலைவர் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை சிரேஸ்ட
விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக உப
வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் திறந்து வைப்பார்.
இச் சிலையை சாஹித்தியரத்னா தி. ஞானசேகரன் திருமதி ஞானலக்ஷ்மி ஞானசேகரன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை பிற்பகல் தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அங்கு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
Post A Comment:
0 comments so far,add yours