அரச
வர்த்தமானியால் பிரகடனம் செய்யப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப
பிரதேச செயலகம் என்று கூறுபவரால் தீர்வு கிட்டுமா? இவர்களை தமிழ் முஸ்லிம்
மக்கள் இன்னமும் நம்புகிறீர்களா?
இவ்வாறு காரைதீவில் நேற்று நடைபெற்ற
ஊடகச்
சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச
தலைவரும் காரைதீவு பிரதேச முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்
கூறினார்.
பாராளுமன்றத்தில்
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆற்றிய உரைக்கு பதிலடி
கொடுக்கும் வகையில் இவர் மேற்படி கருத்தைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
காரைதீவில்
65 வீதம் 12 கிராம சேவக பிரிவில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு 20 லட்சம்
ரூபாயும்,35 வீதம் 5 கிராம சேவக பிரிவில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு 46
லட்ஷம் ரூபாயும் இவரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில்
இருந்தே தெளிவாக விளங்குகின்றது காரைதீவு ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தமிழ் மக்களுக்கு மிக அநியாயம்
செய்துகொண்டிருக்கின்றார் என்பது .
தமிழ் முஸ்லீம் இன முரண்பாடுகள் வருவதற்கு காரணம் இவ்வாறான அரசியல்வாதிகளினால் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கு கூடுதலாக நிதிஒதுக்கியும் தமிழர்களுக்கு குறைவாக ஒதுக்குவதும் பிணக்குகள் வர காரணமாக இருக்கிறது.
காரைதீவிலும் நாவிதன்வெளியிலும் பாரிய புறக்கணிப்பை செய்திருந்தார் . கல்முனை வடக்கில் அபிவிருத்திக்குழு கூட்டத்தினை கூட்டவில்லை .
அங்கால
பக்கம் போகவுமில்லை. அமைச்சரவை அங்கீகரித்த பிரதேச செயலகம் என்ற அந்தஸ்தை
பொய்யாக்கி அதுவொரு உப பிரதேச செயலகம் என்கிறார்.அப்படிப்பட்டவரிடம்
எம்மவர்கள் மகஜர் கொடுத்து ஜால்ரா அடிக்கிறார்கள்.
இனிமேலாவது
தமிழ் பிரதேச செயலகங்களுக்கு இவ்வாறு இன ரீதியாக இனவாதிகளாக செயற்படுகின்ற
ஒருங்கிணைப்பு தலைவர்களை அரசாங்கம் அல்லது இந்த நாட்டினுடைய அமைச்சர்கள்
நியமிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு
இனத்தை அடிமையாக்கும் சிந்தனையில் செயல்படும் இனவாதி இவரைப் போன்றவர்களை
சகோதர முஸ்லிம்களே புறக்கணிக்க வேண்டும். தமிழ் முஸ்லிம் இனத்தவர்களை
நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிப்பவர்கள் இவ்வாறான செயற்பாட்டையும்
அவருடைய கருத்துக்களையும் வன்மையாக கண்டிக்கின்றேன் .
29
கிராம சேவக பிரிவை கொண்ட ஒரு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த விட மாட்டேன்
என்ற கருத்தையும் தரம் உயர்த்தப்பட்டதையும் மறைக்கும் நிர்வாக கடமைக்கு தடை
போடும் இவ்வாறானவர் எவ்வாறு எமது தமிழ் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் ஆக
ஏற்றுக் கொள்வது?
உணர்வு
உள்ளவர்கள் அனைவரும் இவ்வாறானவர்களை புறக்கணிக்க வேண்டும் என்பதை
வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இனங்களை பகடைக்காயாக பயன்படுத்தி தனக்கு
ஒரு அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காகவே இந்த நாடகம். தேர்தலுக்காக ஆசனம்
வழங்கிய கட்சியையும் தலைமையையும் புறந்தள்ளியவர் தனக்கான அதிகாரத்தை
பெறுவதற்காக எவ்வாறான செயல்பாடுகளையும் செய்ய முனைவார். இவர்களை யாரும்
நம்ப வேண்டாம்.
Post A Comment:
0 comments so far,add yours