( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவில்  (18) சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.

 இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இந் நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான க.சிவலிங்கம், பொ.செல்வநாயகம், திருமதி சுமித்ரா, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் த. மோகனதாஸ், ஆலய தர்மகர்த்தா த.சிவகுமார் ,சமூக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 உறவுகளை நினைவு கூர்ந்து சுடரேற்றி அகவணக்கம் செய்யப்பட்டது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours