எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

சுகாதார அமைச்சின்    சுதேச வைத்திய பிரிவு  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களும் இணைந்து நடத்திய  பாரம்பரிய உணவுக் கண்காட்சியும் மற்றும் விற்பனை நிகழ்வும் இன்று (29) மண்முனை வடக்கு பிரதேசசெயலகத்தின் டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

 சுதேச வைத்திய அமைச்சின் நிதி அனுசரணையுடன் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர்  ஆகியோரின் வழிகாட்டலுடன் பிரதேச செயலக  சுதேச வைத்திய உத்தியோகத்தர்களான  ரி. வேணுகா,    எம். ஜெயபால் ஆகியோரின்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சித்த  ஆயுர்வேத பாதுகாப்பு சபையினால்  வலுவூட்டல் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான  செயலமர்வும், பாரம்பரிய வைத்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பான  கலந்துரையாடலும்  நடாத்தப்பட்டது.

குறிப்பிட்ட நிகழ்வில் இலவச மருத்துவ முகாம், ஆயுர்வேத உற்பத்திகள்,  பாரம்பரிய உணவுகளின் கண்காட்சி மற்றும் விற்பனையும் என்பவற்றுடன் செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர்  வி .வாசுதேவன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்   சிறப்பு விருந்தினர்களாக  சுகாதார அமைச்சின் சுதேச  வைத்திய பிரிவின் மேலதிக செயலாளர்  சந்தன திலகரெட்ண, சுதேச வைத்திய அமைச்சின்  பணிப்பாளர்  பி. தயானந்தன், மாகாண பணிப்பாளர் வைத்தியர்   ஜெயலட்சுமி   பாஸ்கரன் ,   டாக்டர்  கிஷோர் லோஷன் பொரளை  ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்  சிவகுமார்  ஆகியோர்  கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours