(பாறுக் ஷிஹான்)


ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய அதிபராகஎம்.எஸ்.எம்.பைசால் SLPS)  வெள்ளிக்கிழமை(28)  தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

கடந்த 13.06.2024 அன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  எச்.இ.எம்.டபிள்யூ.ஜி திசாநாயக்க  தலைமையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் பெறுபேற்றின் படி  எம்.எஸ்.எம்.பைசால் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமன கடிதத்தினை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம் (SLEAS)  நேற்று வலயக்கல்வி பணிமனையில் வைத்து கையளித்திருந்தார். 

பாடசாலையின் பிரதி அதிபர் எம்.பி.ஏ  றாஜி, பழைய மாணவர் சங்க பிரதி தலைவர் எம்.எஸ். உமர் அலி ஆகியோர் மாலையிட்டு புதிய அதிபரினை வரவேற்றனர். 

இவ்வைபவத்தில் புதிய அதிபரின் குடும்பத்தினர், ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஆசிரிய குழாம், அல் ஹிக்மா கனிஷ்ட பாடசாலையின் அதிபர் எம்எல்.எ.ம். மஹ்ரூப்,    ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்க செயலாளர் சுஹைல் ஜமால்தீன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பி.எம். அறபாத், ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஷம்ஸ் மத்திய கல்லூரி நலன் விரும்பிகள், அல் பஹ்ரியா பாடசாலையின் புதிய அதிபர் எம். அப்துல் சலாம், அல் பஹ்ரியா பாடசாலையின் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours