(அஸ்ஹர் இப்றாஹிம்)
மூதூர் இருதயபுர பிரதேசத்தில் அண்மையில் திருந்துவைக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி ( 18) மூதூர் மணிக்கூடுகோபுர சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மூதூர் பிரதேச செயலகம் வரை நடைபாதை வழியாக சர்வமத தலைவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மற்றும் இருதயபுர பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மூதூர் பிரதேச செயலாளருக்கு பொதுமக்கள் சார்பாக மதுசாலையை மூடும் படியான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours