சம்மாந்துறை வலய நாவிதன்வெளி கோட்ட வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாணவன் வைத்திய துறைக்குத் தெரிவாகியுள்ளார்.
நாவிதன்வெளி
அன்னமலை மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) நேற்று முன்தினம் வெளியான க
பொ த உயர் தர பரீட்சைப் பெறுபேற்றினடிப்படையில் உயிரியல் துறை மாணவன்
செல்வன் துரைரத்னம் அபினேஸ் 2ஏபி பெற்று வைத்திய துறைக்கு
தெரிவாகியுள்ளார்.
நாவிதன்வெளி
பிரதேசத்தில் ஆரம்ப கல்வியை கற்று உயர்தரம் கற்பதற்கு நகரத்தில் உள்ள
பாடசாலைகளை தேடிச்செல்பவர்களுக்கு மத்தியிலே, இப் பாடசாலையின் 88 வருடகால
வரலாற்றில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை இப் பாடசாலையிலே கற்று இன்று
மருத்துவ துறைக்கு செல்ல இருக்கின்ற அபினேஸ் என்ற மாணவனுக்கு சரமாரியாக
வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அதிபர் முன்னாள் அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாணவனின் தந்தை துரைரத்னம்( மதி) தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours