( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  வேதநாயகம் ஜெகதீஸன்  போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (5) புதன்கிழமை அமைச்சில் பதவியேற்பு வைபவம் நடைபெறுகிறது.

பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் இலங்கை நிருவாக சேவையில் 2003இல் இணைந்தவர். இவர்  நாவிதன்வெளி ஆலையடிவேம்பு காரைதீவு  போன்ற பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றினார். 2019ல் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்று கடந்த ஆறு வருடங்களாக கடமையாற்றி வந்தார்.

விசேட தர அதிகாரியான இவர் ஆன்மிக விடயங்களில் கூடுதலான நாட்டத்தை கொண்டிருந்தவர்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரான வி.ஜெகதீஸன் மூவின மக்களுக்காகவும் சமமாக பணியாற்றிய உயர் அதிகாரியாவார். நேற்று முன்தினம் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இவரது இடத்திற்கு காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours