( காரைதீவு  வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய தலைவராக பிரபல சமுகசேவையாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும், முன்னாள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கலாநிதி கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

 ஆலயத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் நேற்றுமுன்தினம்(22) சனிக்கிழமை மீனாட்சிஅம்மன் பழைய சந்நிதானத்தில் பரிபாலன சபையின் ஆலோசகரும் புதிய நிருவாக சபைதெரிவுக்கான தற்காலிக தலைவருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

அச்சமயம் புதிய நிருவாக சபை முறைப்படி தெரிவு செய்யப்பட்டது.

கடந்த 10வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம் 
ஆலய குரு சிவ ஸ்ரீ சபா.கோவர்த்தன சர்மா அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது 

முன்னதாக இதுவரை இறைபதமடைந்த முன்னாள் தலைவர் கோ.கமலநாதன் வினாயகமூர்த்தி முத்தையா மற்றும் உறுப்பினர்கள் மறைவையிட்டு 2நிமிடநேரம் மௌன ஆத்மாஞ்சலி நடாத்தப்பட்டது.

புதிய பரிபாலன சபை வருமாறு;
தலைவராக மீண்டும் கி.ஜெயசிறில் செயலாளராக மீண்டும் த.சண்முநாதன் பொருளாளராக மீண்டும் அ.சுந்தரராஜன் தெரிவு செய்யப்பட்டனர். மூவருக்கும் முறைப்படி உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

உபதலைவர்களாக பி.சண்முகராசா ஏ.காராளசிங்கம் கே.கணேசன்  உப செயலாளராக எஸ்.சிறிகாந்தன் மற்றும் 
கணக்காளர்களாக கே.உமாரமணன் கே.குழந்தைவடிவேல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆலோசகர்களாக  வி.ரி.சகாதேவராஜா சி.அரியநாயகம் ஆகியோர் சபையால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

நிருவாக சபை உறுப்பினர்களாக அம்பாறை மாவட்டத்தின் சகல தமிழ்ப் பிரதேசங்களிலிருந்தும் 21 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யாப்பில் சில ஷரத்து மாற்றங்களுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
 பின்னர் ஆலயபரிபாலனசபையின் நிருவாகசபை உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

மீண்டும் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதையிட்டு பலரும் ஜெயசிறிலுக்கு வாழ்த்துக்களைக்கூறினர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours