(எஸ்.அஷ்ரப்கான்)
உலக
சுற்றாடல் தினத்தையொட்டி சிலோன் ஜேனலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் ஒலுவில்
அல்-மதீனா வித்தியாலயத்தில் மாபெரும் மரம் நாட்டு விழா இன்று (05)
நடைபெற்றது.
பாடசாலையின்
அதிபர் கே.எல்.அமீர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிலோன் ஜேனலிஸ்ட்
போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ஜெஃபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
மரக்கன்றினை நாட்டி வைத்தார்.
இதில்
சிலோன் ஜேனலிஸ்ட் போரத்தின் பொதுச் செயலாளர் எஸ். அஷ்ரப்கான், பிரதித்
தலைவர் ஏ.எல்.எம். ரபீக் பிர்தௌஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து
சிறப்பித்தனர்.
இவ்
விழாவில் அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டியில் கும்மி
நடனத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற எம்.எஸ். சாரா அதீமா, ஏ.விB. சைனப்
மிஸ்பா, ஏ.எம்.ரிம்ஸா , எம்.எஸ்.ஆயிஷா , எம்.ரி.அக்ஸா, எப்.ஹப்ஸா மர்யம்
மற்றும் இசையும் அசையும் நிகழ்சியில் இரண்டாமிடம் பெற்ற எம்.எப்.இல்மா
மரியம் ஆகிய மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours