மாளிகைக்காடு செய்தியாளர்

காரைதீவு பிரதேச மாவடிபள்ளியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற தகுதியானவர்கள், சாதனையாளர்கள் கௌரவிப்பும், மாவடிப்பள்ளி பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் தொடக்கவிழாவும் மாவடி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கழக தலைவரும், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக இஸ்லாம் பாட வளவாளருமான மௌலவி ஏ.ஜே.எம். அஸ்ரப் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலய திறந்தவெளி அரங்கில்  நடைபெற்றது.


அதி திறமை சித்திகளை பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாவடிப்பள்ளி பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் நான்கு அணிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மயோன் குரூப் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளரும், ரிஸ்லி கல்வி மைய தலைவருமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ரிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன், மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலய அதிபர் வீ.எம். ஸம்ஸம், அல்- ஜலால் வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எல். ரஜாப்தீன், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவடிப்பள்ளி அமைப்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours