எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சர்வதேச
யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான யோகா தின
நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது
மட்டக்களப்பு
ராமகிருஷ்ண மிசன், விவேகானந்த மனித வள மேம்பாட்டு நிலையம், ஐஸ்வர்யம் யோகா
நிருவனம் ஆகியன இணைந்து நடாத்திய சர்வதேச யோகா தின நிகழ்வானது கல்லடி
உப்போடை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு
ராமகிருஷ்ண மிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ்
தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட
மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்ஜனி முகுந்தன் கலந்து
சிறப்பித்திருந்ததுடன், குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன்,
மட்டக்களப்பு
ராமகிருஷ்ண மிசன் உதவி மேலாளர் உள்ளிட்ட ஐஸ்வர்யம் யோகா நிருவனத்தின்
உயரதிகாரிகள், யோகா கலை பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து
கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours