( வி.ரி.சகாதேவராஜா) 



 உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாக இருந்தால் விளையாட்டு மிகவும் அவசியமாகும்.
 இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்  செபமாலை மகேந்திரகுமார் தெரிவித்தார்.

 சம்மாந்துறை வலயமட்ட விளையாட்டு போட்டி இன்று (12)  வெள்ளிக்கிழமை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 சம்மாந்துறை வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. முஸ்ரக்அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்  பணிப்பாளர் எஸ் . மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார் .

மேலும் சிறப்பு அதிதிகளாக பிரதிக் பணிப்பாளர்களான யசீர் அரபாத், நிலோபரா நுஸ்ரத், சியாட் , இறக்காமம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மகுமூதுலெவ்வை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

 நிகழ்வில் முன்னதாக அதிதிகள் பாண்ட்வாத்தியம் கோலாட்டம் மற்றும் பல பாரம்பரிய நிகழ்வுடன் வரவேற்கப்பட்டார்கள்.

 அங்கு பெருவிளையாட்டுகளில்  கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

 அதற்கான வெற்றிக் கிண்ணத்தை பணிப்பாளர் மகேந்திர குமார் வித்தியாலய அதிபர் எஸ். இளங்கோபனிடம் வழங்கி வைத்தார். ஏனைய கண்கவர் நிகழ்வுகளும் நடைபெற்றன.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours