(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை ரோயல் வித்தியாலய சுற்றுமதில் அமைப்பதற்க்கு அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் பயனாக கல்முனை கல்வி வலய கமு/கமு/ கல்முனை ரோயல் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றுமதில் நிர்மாணப்பணி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது.
கமு/கமு/கல்முனை ரோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கலை நாட்டி வைத்தார்.
நிகழ்வின் அங்கமாக அகில இலங்கை தமிழ் மொழித் தின கோட்டமட்ட பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட மாணவி ஏ.ஆர்.எப். மினுபத் அவர்களுக்கு பிரதம அதிதி யினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.ஏ. கலீல் ரஹ்மான்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாபா,இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், ஊடக செயலாளர் ரியாத் ஏ மஜீத்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours