இ.சுதாகரன்
வடக்கு கிழக்கில் தமிழ் பொதுவேட்பாளரா? சிங்கள வேட்பாளரா? தமிழர்களின் தெரிவு என ஜி.ஸ்ரீநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்இ
இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போதுஇவடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்கு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித்துவ ஆட்சி முறை 1978 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.தமிழ் மக்கள் எட்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தர்களில் வாக்களித்துள்ளனர். அந்தவகையில் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மாறி மாறி வாக்களித்துள்ளனர்.
ஜனாதிபதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட எவரும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எதனையும் தரவில்லை. இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே மட்டு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது பதின்மூன்றாவது அரசியல் யாப்புத்திருத்தம் கூட போராட்ட அழுத்தத்தின் மத்தியில் இந்தியரசின் தலையீட்டால்தான் வழங்கப்பட்டது.அதில் வழங்கப்பட்ட மாகாண சபை முறை கூட இதுவரை முழுமையான அதிகாரங்களுடன் நடைமுறையாக வில்லை.அந்த முறைமை கூட ஒன்றையாட்சி என்னும் உருக்குத் தூணில் சங்கிலியால் கட்டப்பட்ட அப்பாவிப்பசு போலவே அமைந்துள்ளது.
அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு ஜனாதிபதியும் சிங்கள மக்களுக்கான ஜனாதிபதியாகவே செயற்பட்டுள்ளனர்.
ஜனாதிபதிகள் பல்லின சமூகங்களின் வாக்குகளைப் பெற்றாலும்,ஓரின சமூகத்தின் ஜனாதிபதியாகவே செயலாற்றி வந்துள்ளனர்.
ஏறத்தாழ 46 ஆண்டுகள் பல ஜனாதிபதிகளின் ஏமாற்று வித்தைகளைத் தமிழர்கள் நன்றாகப் படித்துள்ளனர்.இப்படிப் பினையானது ஒற்றையாட்சி முறைஇ சிங்கள பெளத்த மேலாதிக்கம் மாற்றமடையாது என்பதை விளக்கியுள்ளது.
மேலும், உள்நாட்டுப் பொறிமுறையில் தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை என்பதையும் விளக்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ் மக்கள் ஓரணியில் ஒற்றுமையாகி மாற்று வழியினைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதில் ஒரு வழியாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற சிந்தனைப் பாய்ச்சல் ஏற்பட்டுள்ளது.எனவேஇ ஒவ்வொரு தமிழ் மொழியாளரும், ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கட்சியும் இவ்விடயத்தை அக்கறையுடன் ஆழமாகப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
தமிழர்களின் ஒற்றுமை, தமிழத் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை, அவர்களது அபிலாஷைகள், பிரச்சினைகளை ஒற்றுமையாக எடுத்துரைப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை.
எனவே, வடக்கு கிழக்கில் தமிழ்ப் பொது வேட்பாளரா? சிங்கள வேட்பாளரா? தமிழர்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற வேண்டும் என்பதைத் தமிழ் மொழியாளர்கள் தீர்மானிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளரைப் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற அறை கூவல் சிங்களத் தேசியக் கர்ச்சனையாகவே அமைய முடியும். தமிழர்களின் நியாயமான கோரிக்கையாக அமையாது.
தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியம் சார்பான கருத்தியல் ஒற்றுமையாக ஒரே குரலில் ஒலிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் தமிழ் மூச்சாக இருக்க முடியும்.எனத்தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours