மாளிகைக்காடு கமு/கமு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய அதிபர் காரியாலயம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்களுக்கிடையிலான நடைபாதை ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத் திட்ட நிகழ்ச்சி திட்டம் - 2024 நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கிய ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவியினால் அமைக்கப்பட்ட புதிய அதிபர் காரியாலயம் மற்றும் வகுப்பறை கட்டடடங்களுக்கிடையான நடைபாதை ஆகியவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதன்போது சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் பேண்ட் வாத்திய மாணவர்களின் வாத்தியங்கள் முழங்க, பாரம்பரிய கலையான சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் தலைமையிலான பொல்லடி மாணவர்கள் பொல்லடி அடித்து அதிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
"கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா" எனும் தொனிப்பொருளில், மாளிகைக்காடு கமு/கமு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் கௌரவ அதிதியாகவும் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுல நாயகி சஜிந்திரன் விசேட அதிதியாகவும் காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்ஜீவன் சிறப்பு அதிதியாகவும் கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் மற்றும் பிரதி, உதவி கல்விப் பணிப்பாளர்கள், சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையின் அதிபர் யூ.எல் நஸார் உட்பட ஏனைய காரைதீவு, சாய்ந்தமருது கோட்டப் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தோடு, பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரிய, ஆசிரியைகள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலை சமூகத்தினரும் இதன் போது கலந்து கொண்டனர்.நிகழ்வை ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஏ.எல்.நயீம் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
Post A Comment:
0 comments so far,add yours