(அஸ்ஹர் இப்றாஹிம்)
"டயக்கோனியா" மற்றும் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணையில் போதை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
திட்ட இணைப்பாளரும், இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபருமான . ஏ. ஜி .எம். றிசாத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இளைஞர் யுவதிகள் மத்தியில் எவ்வாறு போதை பாவனை பரவலாக்கப்படுகின்றன அவை எவ்வாறான முறைகளில் விஸ்தரிக்கப்படுகின்றன என்பன தொடர்பான நாடகங்கள், போதையினால் உண்டாகும் தீமைகள் . அதில் நாம் எவ்வாறு பாதிக்கப் படுகின்றோம் என்பதனை எடுத்துக்காட்டும் வில்லுப்பாட்டு மற்றும் இஸ்லாமிய கசீதா , உரையாடல் என பல ஆக்கங்கள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் .எம்.எச்.எம். ஜாபிர் , கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொதுப் பொலிஸ் பரிசோதகர் .டபிள்யூ.வாஹிட் , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சீ.ஏ.அசிஸ் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
காரைதீவு விவேகானந்தா மத்திய கல்லூரி, கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயம், கல்முனை இராம கிருஷ்ணமிசன் மகா வித்தியாலயம் , நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகாவித்தியாலயம், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மற்றும் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மாகா வித்தியாலயம் ஆகிய ஏழு பாடசாலைகள் இதில் கலந்துகொண்டு ஆக்கங்களை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours